அபிஷேகம் தாரும் வல்ல தேவனே
வானவரோடு பறந்து செல்ல
1. சத்திய ஆவி வல்லமை எண்ணில்
பூரணமாகப் பொழிந்திடுமே
சத்திய வார்த்தை எண்ணில் நிலைக்க
சுத்திகரித்தென்னை நிறைத்திடுமே
2. நித்திய தேவன் நீசனாம் என்னை
தன்னோடு சேர்க்க தந்த ஆவி
குற்றம் குறைகள் கறைதிரைகள்
முற்றுமே நீக்கும் அபிஷேகம்
3. திக்கற்றோராக கைவிடாதென்றும்
தேற்றரவாளனாய் வந்தார் நம்மில்
திரியேக தேவன் சீயோனின் ராஜன்
அச்சாரமாய் தந்தார் அபிஷேகம்
4. அப்போஸ்தலர்கள் மேல் வீட்டில்கூடி
அபிஷேகம் பெற்ற வல்லமையால்
அடையாளங்களினால் இயேசுவின் அன்பை
அறிவித்தே சென்றார் சாட்சியாக
5. சாத்தானின் சேனை
தோற்றோடச் செய்யும்
சர்வாயுத வர்க்கம் அபிஷேகம்
மாமிசமான யாவரின் மேலும்
அக்கினி ஆவியை பொழிந்திடுமே
HOME
More Songs